கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்: நீலகிரியில் இரண்டாம் சீசன் பரபரப்பு
உதகை நீலகிரி மலைத்தொடரில் இரண்டாம் சீசன் துவங்கியுள்ள நிலையில், ஊட்டி மற்றும் கோத்தகிரி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அலைமோதினர் குறிப்பாக கொடநாடு காட்சி முனை பகுதியில் விடுமுறை தினம் காரணமாக நேற்று சுற்றுலா பயணிகள் பெருமளவில் திரண்ட சுற்றுலா பயனாளிகள்
ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கி உள்ளதால் தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது
ஆதாம் நீரூற்று மின் விளக்குகளில் ஜொலித்து கண்கொள்ளாக் காட்சியளித்தது இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் உறவினர்களுடன் செல்ஃபி எடுத்து குதூகலம் அடைந்தனர்
6,000 அடி உயரத்தில் அமைந்துள்ள கொடநாடு காட்சி முனை நீலகிரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும் 220 டிகிரி பரந்த காட்சியுடன பசுமையான தேயிலைத் தோட்டங்கள் வண்ணமயமான பள்ளத்தாக்குகள் சுற்றுலா பயணிகளை மெய்மறக்க வைத்தன மோயார் நதி பவானி அணை தருகின்றன மேற்கு & கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடம் ஆகியவை பார்வையாளர்களை ஈர்த்தன
ரேங்கசுவாமி சிகரம் ரேங்கசுவாமி தூண் தங்கமேடச்சேரி கிராமம் தேக்கம்பாறை நிலப்பரப்பு போன்றவை தெளிவாகக் கண்ணில் கானபட்டன காலை மாலை நேரங்களில் சூரிய உதயமும் அஸ்தமனமும் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் கூடினர்
நேற்று மதியம் ஊட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. மழையால் குளிர்ந்த வானிலையும் பசுமையுடன் பரவிய இயற்கை அழகும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவமாக அமைந்தது
கோடை விடுமுறை ஆரம்பமாகியுள்ளதால் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்
நேற்றைய ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக ஊட்டி கோத்தகிரி கொடநாடு பகுதிகள் அனைத்தும் பயணிகளின் சிரிப்பிலும் சலசலப்பிலும் களைகட்டின
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போக்குவரத்து வசதிகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன அனைவரும் விதிகளை பின்பற்றி பாதுகாப்பாகச் சுற்றுலாவை அனுபவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment