நகர ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 September 2025

நகர ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது

 


நகர  ஒன்றிய  பேரூர் கழக செயலாளர்கள்  கூட்டம் நடைபெற்றது 


நீலகிரி மாவட்ட திமுக நகர  ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை  தலைவர்  போஜன்    தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ   அனைவரையும்  வரவேற்றார்.  


கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன், கூடலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் பரமேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்,  கழக முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது, கழக தலைவர் மு க ஸ்டாலின்  அறிவிப்பின்படி,


செப்டம்பர் - 15 ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதியிலும் ஓரணியில் தமிழ்நாடு உறுதியேற்பு நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடத்துவது, 


மேலும், செப்டம்பர் 20 தேதி உதகையில் ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்புடன் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


கூட்டத்தில், மாவட்ட  துணைச்  செயலாளர்கள்  ரவிகுமார்,  லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி,  தலைமைச்  செயற்குழு  உறுப்பினர்கள்  திராவிடமணி, காசிலிங்கம், செந்தில் ரங்கராஜ், தம்பி இஸ்மாயில், சுனிதா நேரு, நகர  செயலாளர்கள்  ஜார்ஜ்,  ராமசாமி,  இளஞ்செழியன், ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் பரமசிவன், லாரன்ஸ், காமராஜ், நெல்லை கண்ணன், தொரை,  பிரேம்குமார்,  பீமன்,  சிவானந்தராஜா, சுஜேஷ், ஜெகதீசன், உத்தமன், பேரூர்  கழக  செயலாளர்கள்  பிரகாஷ்குமார், உதயகுமார், நடராஜன், சதீஸ்குமார், சுந்தர்ராஜ், காளிதாஸ், சஞ்சீவ்குமார், முத்து, ரமேஷ்குமார், சின்னவர், சுப்ரமணி, மார்டின் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


கூட்ட முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில் ரங்கராஜ் நன்றி கூறினார்.                                       


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad