உதகை அருகே சோலூர் கோக்கால் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்திய செஞ்சிலுவை சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சோலூர் கோக்கால் அரசு உயர்நிலை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் ராஜா, ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், கோக்கால் கிராம சமூக ஆர்வலர்கள் சிவகுமார், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுவினர் மருத்துவர் ஜெய்னப்
பாத்திலா, செவிலியர் சுமதி,
மருந்தாளுனர் நவீன், நிர்வாக உதவியாளர் லாய்சான், உதவியாளர் வினோத்குமார் அடங்கிய மருத்துவ குழுவினர் இரத்த அழுத்தம், எடை, இரத்த சர்க்கரை அளவு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர் இலவச மருந்துகளும் வழங்கப்பட்டது.
முகாமில் கோக்கால் மற்றும் கீழ்கோக்கால் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமிற்கு ஏற்பாடுகளை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment