பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் செல்லும் கழிவு நீர் கண்டு கொள்ளுமா உதகை நகராட்சி.
நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலைய பகுதியிலிருந்து ராட்டன் டாட்டா பகுதிக்கு செல்லும் சாலையில் அரசினர் மாணவர் விடுதி முன்புறம் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் நடந்து செல்லும் மக்களும் மிகவும் சிரமப்பட்டு செல்லும் நிலை உருவாகி உள்ளது இச்சாலையில் கடந்த 15 நாட்களாக கழிவுநீர் சாலையில் செல்கின்றது இதுவரை நகராட்சியினர் இந்த முக்கிய சாலையினை கண்டு கொள்வதாக தெரியவில்லை இப்பகுதியில் கழிவுநீர் துர்நாற்றத்துடன் செல்வதால் இதன் அருகில் அரசினர் மாணவர் விடுதி இருப்பதால் நோய் தொற்றும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது ஆகவே நகராட்சியினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர் கண்டு கொள்ளுமா நகராட்சியினர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment