சோகத்தொரை கிராமத்தில் மாணவப் படைப்பாளர்களின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சஞ்சனா ஓரான், சமிக்க்ஷா, வினிஷா ஆகிய மாணவிகள் எழுதிய "தி வைல்ட் எலிபெண்ட்ஸ்"என்ற நூலை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சு.மனோகரன்,. மாவட்ட சமக்ரசிக்சா உதவிதிட்ட அலுவலர் அர்ச்சுணன்,மாவட்டமையநூலக நூலகர் ரவி, ஆகியோர் வெளியிட்டனர். என்.எஸ் அய்யா பள்ளி முதல்வர்.கணேசன், வட்டார கல்விஅலுவலர்பாண்டியம்மாள், சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சந்திரசேகர் வரவேற்றார்.ஆசிரியர் புஷ்பா நன்றி கூறினார்.விழாவில் பேசிய சு.மனோகரன் அத்தனை குழந்தைகளும் ஆற்றலுடன் பிறக்கின்றன. அதைக்கண்டறிந்து ஊக்குவிக்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன்வந்தால் அனைத்து குழந்தைகளும் சாதனையாளர்களாவார்கள். ஆனால் இன்றைய கல்வி முறை பணம் சம்பாதிப்பதற்கனதாக மாறியுள்ளது .குழந்தைகளை பணம் வழங்கும் ஏ.டி.எம் கருவிகளாகமாற்ற பெற்றோர் விரும்புகிறார்கள்.எனவே ஆற்றல் மழுங்கி போகிறது.அரசு பள்ளி களில் கலை இலக்கியம் விளையாட்டு போன்றவற்றை வளர்க்க செயல்படும் திட்டங்களை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
நீலகிரி சிறார் மற்றும் ஆசிரியர் இதழ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமாரி, நூலகர்சாந்திமுனைவர். செந்தில்குமார் முனைவர் பார்த்தசாரதி ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment