பந்தலூர் கிளை நூலகத்தில் மத்திய அரசு பணிக்கு தேர்வான பந்தலூர் பகுதியை சேர்ந்த முகேஷ்க்கு பாராட்டுவிழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 September 2025

பந்தலூர் கிளை நூலகத்தில் மத்திய அரசு பணிக்கு தேர்வான பந்தலூர் பகுதியை சேர்ந்த முகேஷ்க்கு பாராட்டுவிழா

 


பந்தலூர் கிளை நூலகத்தில் மத்திய அரசு பணிக்கு தேர்வான பந்தலூர் பகுதியை சேர்ந்த முகேஷ்க்கு பாராட்டுவிழா நடைபெற்றது.


பந்தலூர் முழுநேர கிளை நூலகத்தில் போட்டி தேர்வுக்கு 50க்கு மேற்பட்டோர் படித்து வருகின்றார். இதில் படித்த முகேஷ் மத்திய அரசின் பருத்தி துறையில் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்று தேர்வானார். இவருக்கு பந்தலூர் முழுநேரகிளை நூலகம், வாசகர் வட்டம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கினார். கிளை நூலகர் நித்தியகல்யாணி, மகாத்மா காந்தி பொது சேவை மையம் தலைவர் நௌஸாத், அம்பேத்கார் மக்கள் இயக்கம் செயலாளர் இந்திரஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதி கிருஷ்ணா பாரதியார், போட்டி தேர்வு ஒருங்கிணைப்பாளர் அன்வர், ஆகியோர் வாழ்த்தினார்கள்.


மத்திய அரசு பருத்தி துறையில் பணிக்கு தேர்வான முகேஷ் ஏற்புரை வழங்கி பேசும்போது மத்திய அரசு ஆட்சிபணிக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி பெற்று இருந்தேன். ஆட்சி பணி தேர்வு எழுத இயலாத நிலையில் பருத்தி துறை தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றேன். நான் போட்டி தேர்வுக்கு படிக்க பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். அதுபோல் பந்தலூர் கிளை நூலகத்தில் படிக்க தேவையான வசதிகள் புத்தகங்கள் கிடைத்தன. இதனால் எளிதில் இந்த தேர்வில் வெற்றி பெற முடிந்தது. மத்திய அரசு பணிக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன அவற்றை பயன்படுத்தி கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என்றார்.


தொடர்ந்து முகேஷ்க்கு நூலகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி சேவை மையம், அம்பேத்கார் மக்கள் இயக்கம் உள்ளிட்டவை சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் முழுநேர கிளை நூலக பணியாளர்கள், நூலக போட்டி தேர்வு மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட 

No comments:

Post a Comment

Post Top Ad