மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் எமரால்டு மாதா ஆலய திருவிழா
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவானது நாளைய தினம் சிறப்புமாக நடைபெற உள்ளது இதனை அடுத்து ஆலயத்தின் முன்பாக வைக்கப்பட்டுள்ள ஒளி விளக்குகளால் ஆன பதாகையில் அன்னை வேளாங்கண்ணி மாதாவின் திருவுருவத்தை ஜொலிக்கும் வகையில் ஒளி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது இதில் கவனிக்க கூடிய விஷயமாக பார்த்தால் நீலகிரி மாவட்டத்தில் எங்கும் இல்லாத ஒற்றுமையாக எமரால்டு பகுதியில் எம்மதமும் சம்மதமே என்ற கோட்பாட்டுக்கு இணையாக மக்கள் ஒன்றுபட்டு வாழ்கிறார்கள் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அந்தப் பதாகையில் இந்து கிறிஸ்துவர் இஸ்லாமியர் என மும்மதத்தையும் குறிக்கும் பதாகையும் ஒன்றாக அமைக்கப்பட்டிருப்பது இவ்விழாவின் சிறப்பாகவும் எமரால்டு பகுதியின் ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது இதை பார்க்கும் சுற்றுவட்டார பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், பேருந்தில் செல்பவர்களும், இதுபோன்ற ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் விழாவினை ஏற்பாடு செய்த விழா குழுவினருக்கும் பங்கு மக்களுக்கும் எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் மேலும் இதுபோன்று அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுவது மேலும் இவ்விழாவினை மெருகூட்டும் வண்ணமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment