ஆமை வேகத்தில் நடைபெறும் உதகை நகராட்சி சந்தை பணிகள்
உதகை மையப் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி சந்தை மிகவும் பிரபலமான ஒன்று ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இது சந்தையில் சுமார் 1500 கடைகள் இருக்கின்றன. இந்த நகராட்சி சந்தையை நம்பி பல ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நகராட்சி சந்தையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு புதிதாக பார்க்கிங் தளத்துடன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் மூன்று ஆண்டுகளாக இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்சமயம் கட்டுமான பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே மக்களின் சிரமத்தில் சிரமத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பணிகளை துரிதமாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கையாக வைத்துள்ளார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு நீலகிரி மாவட்டம்.


No comments:
Post a Comment