பந்தலூரில் விவசாயிகளுக்கான மூலப்பொருட்கள் வழங்கிய ஆழ்ந்த சில்ட்ரன் அறக்கட்டளை
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே குந்தலாடியில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு மூலப்பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத் தலைமை தாங்கினார். சோலிடாரிட்டி நிறுவன ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் பயிற்றுநர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இந்திய தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் அஞ்சலி பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் குந்தலாடி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு பரப்பு இயந்திரம், களை கொத்து, கையுறை மற்றும் பூச்சி விரட்டி மற்றும் பூச்சிகொல்லி இயற்கை மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment