பந்தலூர் கிளை நூலக வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 September 2025

பந்தலூர் கிளை நூலக வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது.

 


பந்தலூர் கிளை நூலக வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது.


பந்தலூர் முழு நேர கிளை நூலகத்தின் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நூலக வாசகர் வட்டதலைவர் முத்துகுமார் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட ஆலோசகர் சு. சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். முன்னதாக நூலகர் பெ. அறிவழகன் வரவேற்றார்.

 

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இந்த ஆண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நூலக வாரவிழாவை பந்தலூர் வாசகர் வட்டத்தின் சார்பாக நூலக வார விழாவை சிறப்பாக நடத்துவது எனவும், தமிழ்நாடு அரசு வழங்கும் நல்நூலகர் விருதிற்கு தயார் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வாசகர் வட்டக் கூட்டத்தில் வைத்து வாசகர் வட்ட பார்வைக்கு வைக்கப்பட்டது. வட்டதலைவர் மற்றும் உறுப்பினர்கள் நூலகர் ஜீ நித்தியகல்யாணி பணியினை பாராட்டி விருது தேர்வில் வெற்றி பெறவேண்டும் என வாசகர் வட்டத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து நூலக பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அதிக நூலக உறுப்பினர்கள் சேர்ப்பது, போட்டி தேர்வுக்கு கூடுதல் மாணவர்கள் சேர வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் நௌசாத், ராமச்சந்திரன், இந்திரஜித், ரகு, நூலக பணியாளர்கள் அம்பிகா, சரஸ்வதி மற்றும் வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் ஜீ. நித்தியகல்யாணி நன்றியுரை வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad