நீலகிரி மாவட்டதில் டிராவிடோகெக்கோ இனப் பல்லி:
நீலகிரியில் அழகிய டிராவிடோகெக்கோ இனம் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயிரியல் பொக்கிஷம்
இந்தியா முழுவதிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பல்லுயிர்களின் பொக்கிஷமாக விளங்குகின்றன எண்ணற்ற தாவரங்கள், விலங்குகள், குறிப்பாக அரிய மற்றும் உயிரினங்களுக்கு இவை முக்கிய வாழ்விடமாக அமைந்துள்ளன. இந்த மலைத் தொடரின் தனித்துவமான சூழலியல் அமைப்பு, தொடர்ந்து புதிய பல்வேறு உயிரின கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்பு தருகிறது
அழகிய டிராவிடோகெக்கோ
சமீபத்தில், நீலகிரி மாவட்டத்தில் டிராவிடோகெக்கோ பல்லி இனம் காணப்பட்டது
இந்த இனம் மற்ற கெக்கோக்களைப் போல இல்லாமல் தனித்துவமான உடல் அமைப்பு நிறம் மற்றும் மரபணு அம்சங்களை கொண்டுள்ளது.
பொதுவாக டிராவிடோகெக்கோக்கள் சிறிய பாறைகள் அல்லது மரங்களில் வாழும் பல்லிகள்
இரவு நேரங்களில் செயல்படும் திறன் கொண்டவை, தங்களின் நிற அமைப்பால் சுற்றிய சூழலோடு கலந்து காட்சி அளிக்கின்றன
மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம்
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இன்னும் காணப்படாத உயிரினங்கள் அதிகம் இருக்கக்கூடும் எனும் வாய்ப்பை வலியுறுத்துகிறது இவை சில உயிரினங்கள் ஒரே குறிப்பிட்ட வாழ்விடத்தில் மட்டுமே வாழும் தன்மையுடையவை வாழ்விடங்கள் பாதுகாக்கப்படாவிட்டால்இந்த உயிரினங்கள் எளிதில் அழிந்துவிடும் அபாயம் உள்ளது இந்த தகவல், மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகள் மற்றும் உயிரியல் வளங்களை பாதுகாப்பது அவசியம் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது
இந்த பல்லி இனம், மற்ற கெக்கோக்களைப் போல இல்லாமல் தனித்துவமான உடல் அமைப்பு வண்ணம் மற்றும் மரபணு அம்சங்களை கொண்டுள்ளது பொதுவாக இவை சிறிய பாறைகள் அல்லது மரங்களில் இரவு நேரங்களில் செயல்பட்டு வாழ்கின்றன
காடுகளில் பயணிக்கும் போது, மரங்களின் மீது அல்லது பாறைகளில் இச்சிறிய பல்லிகளை கவனமாகப் பாருங்கள்.
அவர்களை தொல்லையாக்காமல் இயற்கை வழிகளையும் சத்தமில்லாத நடப்பையும் பின்பற்றவும் இத்தகைய அரிய உயிரினங்களை காண்பது, இயற்கையின் அற்புதங்களைக் கண்டுபிடிக்கும் மகிழ்ச்சியை தருகின்றன
நீலகிரி போன்ற மலைப்பகுதிகள், புலிகள், யானைகள், சிறுத்தைகள் மற்றும் அரிய பல்லிகள் போன்ற உயிரினங்களுக்கான சொர்க்கமாய் உள்ளது. சுற்றுலா சென்றால் இந்த அரிய உயிரினங்களைப் பார்த்து இயற்கையின் மகத்தையும் உணருங்கள் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கின்றனர் தமிழக குரல் இணையதள செய்திகளுக்கு நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment