சிவகங்கையில் 2025ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான அண்ணா விரைவு சைக்கிள் போட்டி 27ஆம் தேதி நடைபெற உள்ளது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 September 2025

சிவகங்கையில் 2025ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான அண்ணா விரைவு சைக்கிள் போட்டி 27ஆம் தேதி நடைபெற உள்ளது


சிவகங்கையில் 2025ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான அண்ணா விரைவு சைக்கிள் போட்டி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.


மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வண்ணம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டும் சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக 27.09.2025 சனிக்கிழமை அன்று காலை 7 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இருந்து நடைபெறவுள்ளது.


சிவகங்கை மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ/மாணவிகள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். கீழ்க்கண்டவாறு போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலும் 13 வயதிற்குள் மாணவர்களுக்கு 15 கி.மீ மற்றும் மாணவிகளுக்கு 10 கி.மீ தூரமும், 15 வயதிற்குள் மாணவர்களுக்கு 20 கி.மீ மற்றும் மாணவிகளுக்கு 15 கி.மீ தூரமும், 17 வயதிற்குள் மாணவர்களுக்கு 20 கி.மீ மற்றும் மாணவிகளுக்கு 15 கி.மீ தூரமும் போட்டிகள் நடைபெற உள்ளது. 


ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளின் போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளுக்கு இவ்வலுவலகம் பொறுப்பேற்காது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ/மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து (Bonafide Certificate) வயதுச் சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வருதல் வேண்டும். சொந்த மிதிவண்டி (சைக்கிள்) கொண்டு வருதல் வேண்டும். 


இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரன மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். (Gear cycle and race cycle )அனுமதி இல்லை. போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்/வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையினை காசோலைாகவோ அல்லது வங்கி மாற்றுவழி மூலமோ மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதால் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ/ மாணவியர்கள் தங்களுடைய வங்கி கணக்கு புத்தக நகலினையும், ஆதார் நகலினையும் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிது.


எனவே போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் மேற்கண்ட விதிகளை பின்பற்றி 27.09.2025 சனிக்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad