இத்தலார் ஊராட்சி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 September 2025

இத்தலார் ஊராட்சி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம் நடைபெற்றது


இத்தலார் ஊராட்சி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம் நடைபெற்றது


நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி கிராமத்தில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் 15 துறைகள் மற்றும் 46 சேவைகள் ஒன்று சேர்ந்து உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம் இத்தலார் சமுதாய கூடத்தில் நடைபெற்றது . இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம்  மற்றும் மீனவர்   நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை என அனைத்து துறைகளும் முன் வைத்து இத்தலார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து கிராம பகுதிகளில் உள்ள மக்கள்களை வரவைத்து இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.இதில் சுமார் 350 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி விண்ணப்பத்தாளில் விண்ணப்பித்து அதிகாரிகளிடம்  ஒப்படைத்து பயன் பெற்று சென்றுள்ளனர் . இந்த முகாமினை குந்தா வட்டாட்சியர் சுமதி மற்றும் உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad