குன்னூர் கோத்தகிரி சாலையில் விரைவில் நீதிமன்றம் கட்டடம்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஒருங்கினைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு குன்னூர் வருவாய் துறையினர் 8 ஏக்கர் நிலத்தினை நீதிமன்ற நீதிபதிகளிடம் வழங்கினர்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த பல வருடங்களாக நீதிமன்றங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன நீதிமன்றத்திற்கு 2004 ஆம் ஆண்டு முதல் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என வழக்கறிஞர்கள் தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற. நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தனர் வழக்கறிஞர்களின் தொடர் முயற்சியால் குன்னூர் கோத்தகிரி நெடுஞ்சாலையில் பிராவிடன்ஸ் காலேஜ் அருகே குன்னூர் வருவாய்துறையினர் சுமார் 8 ஏக்கர் நிலத்தை நீதிமன்றம் கட்டுவதற்கு நிலத்தை நீதிமன்ற நீதிபதிகளிடம் ஓப்படைத்தனர் விரைவில் குன்னூர் கோத்தகிரி சாலையில் ஒருங்கினைந்த நீதிமன்றம் வர உள்ளதால் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் ஒரே வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் அமைய உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் காவல் துறையினருக்கு மிகவும் வேலை பளு குறையும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment