நல்லாசிரியர் விருது பெற்ற திரு கண்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா
இத்தலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நல்லாசிரியர் விருது பெற்ற திரு கண்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் முதலில் நல்லாசிரியர் விருது பெற்ற திரு கண்ணன் அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மதிய விருந்தினை வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து பள்ளியில் பாராட்டு விழாவானது பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. தேவராஜன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற திரு கண்ணன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களும் திரு கண்ணன் அவர்களை பாராட்டி பேசினார்கள் மாணவ மாணவிகளும் ஆசிரியர் திரு கண்ணன் அவர்களை பாராட்டினார்கள் இறுதியில் திரு. கண்ணன் அவர்கள் பேசியபோது இந்த விருதானது மாணவ மாணவிகளுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கண்ணீர் மல்க அந்த உரையை நிறைவு செய்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் தீனதயாளன்
No comments:
Post a Comment