ஆல் தி சில்ட்ரன் சார்பில் கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 September 2025

ஆல் தி சில்ட்ரன் சார்பில் கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

 


ஆல் தி சில்ட்ரன் சார்பில் கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் விநியோகிக்கபட்டது. 


காப்பாலா அரசு ஆரம்ப சுகாதாரா நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவர் பூஜா, மருந்தாளுணர் லிடியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மருத்துவ அலுவலர் ஜனார்த்தனன்  பேசும்போது அரசு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகத்துடன் இதுபோன்று அறக்கட்டளைகள் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்குகின்றன. இதனால் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் மிகவும் குறைவாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு குழந்தைகூட இழப்பு ஏற்படவில்லை. தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவுகளை முறையாக எடுத்துகொள்ள வேண்டும் என்றார்.


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் பேசும்போது. 


கர்ப்பிணிகள் கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்த்து கீரைகள், பழங்கள், சிறுதானிய உணவுகள் போன்ற உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்தம் சோகை குறைபாடு தவிர்க்க இரும்புச்சத்து அதிகம் உள்ள முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, வெல்லம் ஆரோக்கிய உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ளுதல் அவசியம். தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்றார்.


ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது கர்ப்பிணிகள் ஆரோக்கியம் காக்கும் பொருட்டு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகம் கொடுக்க படுகிறது. இதனை கர்ப்பிணிகள் முறையாக தினசரி  எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் மன ஆரோக்கியம் குழந்தையை ஆரோக்கியமாக பெற்று எடுக்க உதவும் என்றார்.


தொடர்ந்து 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருந்தாளுணர், செவிலியர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad