நீலகிரி மாவட்டம் உதகை நகர் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர் சங்க தேர்தல் 29 9 25 இன்று நடைபெற்றது.
உதகையில் இன்று ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர் சங்கம் தேர்தல் எட்டின்ஸ் சாலையில் உள்ள நீலகிரி இன் ஹோட்டலில் நடைபெற்றது இதில் உதகையில் 1800 ஆட்டோ ஓட்டுநர்கள் இருப்பினும் ஆயிரம் ஓட்டுநர்களுக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை இருந்தது இன்று காலை 11:00 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெற்றது இதில் 733 பேர் மட்டுமே வாக்களித்தனர் இதில் தலைவராக பஷீர் என்பவரும் உப தலைவராக கார்த்தி என்பவரும் செயலாளராக ரமேஷ் என்பவரும் துணைச்செயலாளராக அசோக் என்கிற பிரவீன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இத்தேர்தலை படகு இல்லம் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவர் தலைமையில் தேர்தல் குழு அமைக்கப்பட்டு அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். .
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment