நடந்து செல்லும் நடைபாதையில் கால்வாய் நீரானது ஓடுவதால் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டு பட்டறையில் இருந்து பிருந்தாவன் பப்ளிக் ஸ்கூல் வெலிங்டன் செல்லும் வழியில் உள்ள கால்வாய் குப்பைகளால் மூடப்பட்டு மாற்று வழியில் கால்வாய் நீரானது பாதைகளில் நிறைந்து ஓடுவதால் பள்ளி குழந்தைகள் மிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வளியில் பள்ளி குழந்தைகள் அதிகம் செல்லும் வழி என்பதால் மோசமான நிலை ஏற்பட்டுகிறது. இங்கு செல்லும் கழிவு நீர் கால்வாய் நன்கு வடிகால் வசதியுடன் அமைந்தாலே இது மாதிரியான நிலைமை நேரது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அனைவரும் இதே இடத்திலேயே குப்பைகளை வீசி செல்கின்றனர் எனவே, உடனடியாக அப்பகுதியில் ஒரு குப்பைத் தொட்டி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment