உதகை மரவியல் பூங்கா அருகே சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் முன்பு மஞ்சூர் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மற்றும் மழை பெய்து தண்ணீர் தேக்கத்துடன் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பொது மக்களுக்கு மிகவும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆகும் இந்த இடத்தில் மரவியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது அதன் அருகாமையில் பல்வேறு பள்ளிகளும் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி படகு இல்லத்திற்கு செல்லும் முக்கிய வழியாகவும் கருதப்படுகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment