இதய நாள் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 September 2025

இதய நாள் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம்


 இதய நாள் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் செஞ்சிலுவைச் சங்கம் , செஞ்சுருள் சங்கம் மற்றும் Dr.அழகப்பா அறிவியல் சிட்டி  இணைந்து  நடத்திய உலக இதயநாள் விழிப்புணர்வு  குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி தலைமை உரை ஆற்றினார். விலங்கியல் துறைத்தலைவரும்  செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் போதகுரு வரவேற்புரை ஆற்றினார். காரைக்குடி குளோபல் மிசன் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் குமரேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உடல்நலம் காத்தல் வேண்டும் என்றும் முறையான தூக்கம் மற்றும் சரியான உணவுமுறையே இதயத்தைக் காக்கும்  வழிமுறைகள் என்று எடுத்துரைத்தார். லயன்ஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் லியோ மனோஜ்   ஆகியோர் கருத்துரை வழங்கினர் . இளஞ்செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாரதிராணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad