சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 110 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்ட இருப்பதாக காவல் கண்காணிப்பாளர் தகவல்.
சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 110 (79 ஆண் + 31 பெண்) ஊர்க்காவலர் பணியிடங்களை பூர்த்தி செய்ய ஏதுவாக, ஊர்க்காவலர்கள் தேர்வு நடைபெற உள்ளது. எனவே ஊர்க்காவல் பணிக்கு சேர விருப்பமுள்ள, கீழ்காணும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 1. i) பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ii) 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். iii) நல்ல நடத்தை உள்ளவராக இருத்தல் வேண்டும். iv) சிவகங்கை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டு வசித்து வருபவராக இருக்க வேண்டும். v) உடற்தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
2. 30.09.2025 -ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில்ஸஇலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் அவ்விண்ணப்பத்தினை முறையாக பூர்த்தி செய்து அதில் மார்பளவு புகைப்படம் (Passport Size) ஒட்டி 10.10.2025 தேதி முதல் 15.10.2025 தேதிக்குள் சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
3. 15.10.2025 பிற்பகல் 5 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
4. 04.11.2025 -ம் நாள் காலை 07.00 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு நடைபெறும். இத்தேர்வில் அனைத்து விண்ணப்பதாரர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
5. உடற்தகுதித் தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் அசல் கல்விச் சான்றுகள் மற்றும் அதற்கான நகல்களையும் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment