இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட கோத்தகண்டிமட்டம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சிக்கு அருகாமையில் உள்ள கோத்தகண்டி மட்டம் பகுதியில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில், இந்திராநகர், பேலிதலா கோத்தகண்டிமட்டம், வ, ஊ சி நகர், பெரியார் நகர், சுரேந்திர நகர், வினோபஜி நகர், திவ்யா நகர், ஸ்ரீராம் நகர், பழைய அட்டுபாயில், என பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வருகை தந்தனர்.மற்றும் 14 துறைகள் மற்றும் 46 சேவைகள் ஒன்று சேர்ந்து உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம் நடைபெற்றது . இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குறு சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை என அனைத்து துறைகளும் முன் வைத்து இத்தலார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து கிராம பகுதிகளில் உள்ள மக்கள்களை வரவைத்து இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.இதில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி விண்ணப்பத்தாளில் விண்ணப்பித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். உதகை வட்டம் கோட்டாட்சியர் தினுஅரவிந்த் மற்றும் ஊரக வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் சிவகுமார் மற்றும் ஶ்ரீதர் ஆகியோர் முகாமினை விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment