தந்தையின் கனவை நினைவாக்கிய விவசாய குடும்பத்தில் பிறந்த மூன்று பெண்மணிகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 September 2025

தந்தையின் கனவை நினைவாக்கிய விவசாய குடும்பத்தில் பிறந்த மூன்று பெண்மணிகள்


இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட போர்தியாடா கிராமத்தில் தனது தந்தையின் கனவை நினைவாக்கிய விவசாய குடும்பத்தில் பிறந்த மூன்று பெண்மணிகள்              


நீலகிரி மாவட்டம் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட போர்த்தியாடா கிராமத்தில் வசித்து வரும் மகேந்திரன் அவர்களுக்கு தீபா திவ்யா பிரதீபா என்று மூன்று மகள்கள் உள்ளனர். இவர் தனது பிள்ளைகளை படித்து பட்டதாரி ஆக்க  வேண்டும் என்ற  நோக்கத்துடன் தனது உழைப்பில் விவசாயம் செய்து  மூன்று பிள்ளைகளையும் பட்டதாரியாக உருவாக்க தனது பிள்ளைகளுக்கு முதுகெலும்பாய் திகழ்ந்துள்ளார். இவர்களில் முதல் பெண்மணி தீபா துணை பேராசிரியராகவும் இரண்டாவது பெண்மணி திவ்யா வழக்கறிஞராகவும் மூன்றாவது பிள்ளை பிரதீபா  அறிவியல் நிறைஞர் ஆகவும்.. அந்த கிராமத்தில் இவர்கள் மூன்று பேரையும்  சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளார்  இவர்களின் தந்தை மகேந்திரன். இதற்கு சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.  இது போல் ஒவ்வொரு தந்தையும் தாய்மார்களும் தனது பிள்ளைகளுக்கு முதுகெலும்பாய் திகழ்ந்து ஊக்குவித்து ஒவ்வொரு குழந்தைகளையும்  பட்டதாரியாக உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad