திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :
நீலகிரி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட பொருளாளர் மற்றும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு வீ. மணிகண்டராஜ் அவர்களது
தலைமையில், சட்ட மேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்திப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில், கோத்தகிரி திமுக ஒன்றிய செயலாளர் திரு நெல்லை கண்ணன் அவர்கள், பேரூராட்சி தலைவர் திருமதி ஜெயக்குமாரி அவர்கள், பேரூர் கழகச் செயலாளர் திரு காளிதாஸ் அவர்கள், திமுக தலைமை கழக பேச்சாளர் திரு இளந்தென்றல் பாபு அவர்கள், கோத்தகிரி இரத்ததான நண்பர்கள் குழு தலைவர் திரு செல்வம் அவர்கள், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திரு அர்ஜுனன் அவர்கள், நீலமலை அனைத்து தொழிலாளர் சங்க தலைவர் திரு சுப்பிரமணி அவர்கள் மற்றும் பொருளாளர் திரு புவனேஷ் அவர்கள், தந்தை பெரியார் திராவிட கழகம் திரு பரத் அவர்கள், மக்கள் அதிகாரம் திரு ஆனந்தராஜ் மற்றும் ராஜா அவர்கள், சிபிஎம் கட்சி தாலுகா செயலாளர் திரு மணிகண்டன் அவர்கள், மற்றும் நீலகிரி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள்- மாவட்ட துணை செயலாளர் திரு வின்சென்ட், மாவட்ட துணை பொருளாளர் திரு சில்வஸ்டர், ஒன்றிய செயலாளர் திரு டி கே சுரேஷ், ஒன்றிய பொருளாளர் திரு மோரிசன், ஒன்றிய துணைத் தலைவர் திரு பாஸ்கர், ஒன்றிய துணை செயலாளர் திரு சங்கர், ஒன்றிய துணை பொருளாளர் திரு ஜான் பால், பேரூர் துணை செயலாளர் திரு நிக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நீலகிரி மாவட்ட பொருளாளர் திரு வி மணிகண்ட ராஜ் அவர்கள் கோஷம் எழுப்ப அனைவரும் சேர்ந்து கோஷம் எழுப்பி ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment