ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் ஆறுபோல் வழிந்தோடும் கழிவு நீர் சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி நோய் பரவும் அபாயம் என அச்சம்
உலக புகழ்பெற்ற ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு தினமும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வருகை. தருகின்றனர்.குறிப்பாக வார விடுமுறை நாட்களில் இந்த தாவிரவியல் பூங்காசாலை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது
இதனால் கழிவுநீர் மக்கள் பயன்படுத்தும் நடைபாதை முழுவதுமாக ஓடி சாலையிலும் வழிந்தோடுகிறது.இது அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
முக்கிய நடைபாதையில் கழிவு நீர் செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.இந்த பகுதியில், பல நாட்களாக நடைபாதையில் கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. சுற்றுலா பயணியர் முகம் சுளித்து செல்வதுடன், உள்ளூர் மக்களிடமும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அப்பகுதியின் நகரமன்ற உறுப்பினர் இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தருமாறு பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.
No comments:
Post a Comment