நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பொதுமக்களை புல்லட் என்று அழைக்கப்படும் ஆண் யானை அச்சுறுத்தி வந்தது .இதனால் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் கடந்த பல நாட்களாக குடியிருப்பு ஒட்டிய புதர் பகுதியில் இருந்து யானை வெளியே வராமல் வனதுறையினர் கண்காணித்து வந்தனர்.பகல் இரவு என 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புல்லட் யானையை பிடித்தனர் இதனால் பல நாட்களாக தூக்கத்தை கெடுத்த யானையின் தொல்லை இனி இருக்காது என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர் மேலும் பல நாட்களாக இந்த யானையை பிடிக்க பாடுபட்ட வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment