இலவச மின்சாரம் - நீலகிரி இயற்கை விவசாயி ஆதங்கம்.
நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் பெறுவதில் 90 விழுக்காடு கோடீஸ்வரர்களே என்றும் சாமானிய விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைப்பது குதிரைகொம்புதான் என்றும். அரசு துரித நடவடிக்கை எடுத்து ஆய்வுமேற்கொண்டு சிறுகுறு விவசாயிகளுக்கு அரசின் விவசாய இலவச மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் எனவும் இல்லையேல் வசதிபடைத்தவர்கள் மட்டுமே அனுபவிக்கும் நிலையில் சிறு விவசாயிகளின் நிலைமை கவலைக்கிடம் என சமூக ஆர்வலரும் இயற்கை விவசாயியும் ஆன இளித்துரை திரு.N. விஸ்வநாதன் அவர்கள் ஆதங்கம் தெரிவித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment