பொங்கல் பரிசு - அரசு அறிவிப்பு.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு சார்பில் கூட்டுறவு மற்றும் உணவுவழங்கல் துறை அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மற்றும் முகாமில் உள்ளவர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழு கரும்பு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் 2,20,94,585 குடும்ப அட்டை காரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்கள் பயன் பெறுவார்கள். இலவச வேட்டி சேலைகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு 249.76 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment