குன்னூரில் - நாட்டு நலப்பணித்திட்ட முகாம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 December 2024

குன்னூரில் - நாட்டு நலப்பணித்திட்ட முகாம்.

 


குன்னூரில் - நாட்டு நலப்பணித்திட்ட முகாம். 


நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்துள்ள  பாபு நகரில் குன்னூர் புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்ட  முகாம் நடைபெற்றது.  இதில் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி  தலைமை ஆசிரியர் அருட் சகோதரர் தாமஸ் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  மாநில கருத்தாளர் கே. ஜே .ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறிய கருத்துக்கள்.....

 

தற்போது உலகெங்கிலும் காலநிலை மாற்றம்  அதன் தாக்கம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. 2030 ஆம் ஆண்டு  காலநிலை மாற்றத்தில் ஒரு முக்கிய குறியீடாக பேசப்பட்டு வந்தது. 2030ல் பூமியின் வெப்பநிலை  1.5° c தாண்டும் அப்போது காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரை யின் படி இந்த ஆண்டு 2024 செப்டம்பர் மாதத்திலேயே பூமியின் வெப்பநிலை 1.6 டிகிரி சென்டிகிரேட்டை தொட்டுவிட்டது என  அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காலநிலை மாற்றம்  தீவிரம் அடைந்துள்ளது என்பது இதன் பொருளாகும். தற்போது உலகெங்கிலும் வெளியிடப்படும் பசுமை குடில் வாயுக்களின் அளவு குறைவதற்கான எவ்விதமான முயற்சிகளும் காணக் கிடைக்கவில்லை. விஞ்ஞானிகள் பூமியின் வெப்பத்தை குறைவதற்கான பல வழி வகைகளை ஆராய்ந்து வருகின்றனர். அண்டார்டிகா போன்ற பகுதியில் உள்ள  பனிக்கட்டிகள் உருகாமல் தடுப்பது, அதிநவீன பீரங்கிகள் மூலம் சல்பர் என்ற வேதிப்பொருளை  பூமியிலிருந்து 25 கிலோ மீட்டர் உயரத்தில் தூவி விடுவது, தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு  கார்பன் ஆகவும்  ஆக்சிஜனாகவும்  பிரிப்பது, கார்பன் டை ஆக்சைடை  பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான உற்பத்தியை மேற்கொள்வது, பூமிக்கு அடியில் உள்ள பாறை  சந்துகளில் கார்பன் டை ஆக்சைடை நிரப்புவது என்பதைப் போன்ற பல  ஆய்வுகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய முயற்சிகள்  அதிக செலவு பிடிக்கக் கூடியவை. மேலும் இந்த ஆய்வுகளின் பின்விளைவுகள் பற்றி  அறிய முடிவதில்லை. இந்த பூமியை காக்க  தற்போதுள்ள ஒரே  வழி ஏராளமான மரங்களை நடுவதும்  காடுகளின் தரத்தை அதிகரிப்பதும்,  பொதுமக்கள்  தங்களுடைய ஆடம்பரங்களை தியாகம் செய்து எளிமையான வாழ்க்கைக்கு தங்களை தயார் படுத்திக் கொள்வதும் தவிர வேறு வழி இல்லை  என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார் முன்னதாக பள்ளி நாட்டு நல பணித்திட்ட  அலுவலர் ஆசிரியர் வின்செட் அவர்கள்  அனைவரையும் வரவேற்றார். அருட் சகோதரர் அருள் மைக்கேல்  வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் லாசர் நன்றி உரை கூறினார். மாணவர்கள் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு  காலநிலை மாற்றத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதற்கான துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad