நீலகிரியில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில், பிளாஸ்டிக் பாட்டில்கள்;கவர்கள்; டம்ளர்கள்; தட்டுக்கள் உள்ளிட்ட, 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பிற மாவட்டம், மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மறைத்து எடுத்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. திடீர் ஆய்வின் போது பிளாஸ்டிக் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
'அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்பதை கண்காணித்து பணிபுரிய வேண்டும்,' என, போக்குவரத்துக் கழக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மேலாளர் முரளி கூறுகையில், ''அரசு பஸ்களில் திடீர் தணிக்கை செய்யும் போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment