கூடலுார், ஸ்ரீமதுரை வடவயல் பழங்குடி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 December 2024

கூடலுார், ஸ்ரீமதுரை வடவயல் பழங்குடி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு

 


கூடலுார் ஸ்ரீமதுரை வடவயல் பழங்குடி கிராமத்தில் வீடு இல்லாதவர்களுக்கு, வீட்டு மனையுடன் இலவச வீடுகள் கட்டி தர வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.


கூடலுார், ஸ்ரீமதுரை வடவயல் பழங்குடி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு:


நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில், பழங்குடி இனத்தை சேர்ந்த, 35 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு பழங்காலத்தின் உறுதியற்ற, 15 வீடுகள் மட்டுமே உள்ளன.


புதிதாக திருமணம் முடித்தவர்களுக்கு, வீடு கட்ட நிலம் ஏதும் இல்லாததால், ஒரு வீட்டில் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதனால், பல்வேறு சிரமங்கள் சந்தித்து வருகிறோம்.



எனவே, எங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சொந்த நிலம் வைத்திருப்பவர்களுக்கு வீடு கட்டுவதற்கும், இடமில்லாதவர்களுக்கு வீட்டுமனையுடன் இலவச வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad