கோத்தகிரி ராம்சந்த் பள்ளிவாசலில் விழிப்புணர்வு பிரச்சாரம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 December 2024

கோத்தகிரி ராம்சந்த் பள்ளிவாசலில் விழிப்புணர்வு பிரச்சாரம்.

 


கோத்தகிரி ராம்சந்த் பள்ளிவாசலில் விழிப்புணர்வு பிரச்சாரம்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ராம்சந்த் பகுதியில் உள்ள சாபி சுன்னத் ஜமாத் மஜீத் நூருல் ஹுதா பள்ளிவாசலில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் தலைவர் ஹாஜி முகமது சுபீர்  தலைமை வகித்தார். காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் மற்றும் பசுமை நீலகிரி 2024,  ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும்  திட்டத்தின் திட்ட இயக்குனர் ஓய்வு பெற்ற  ஆசிரியர் கே. ஜே. ராஜு அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பேசியபோது கூறிய கருத்துக்கள்.....

 

உலகில் உள்ள அனைத்து மதங்களும் இயற்கையை கடவுளின் வடிவமாக காண்கின்றன. குறிப்பாக இஸ்லாம்  மதக் கோட்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ள  17 தாக்கு பிடிக்கக்கூடிய  வளர்ச்சி குறிக்கோள்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  வாழ்க்கை  முறையாக ஏற்றுக் கொண்டுள்ளது.     உலகில் உள்ள   நிலம் நீர்  காற்று நெருப்பு மற்றும் உள்ள வளங்கள் யாவும்   மனித குலத்திற்கு மட்டுமல்ல  அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை  பசித்தோர்க்கு உணவு கொடுத்தல்  அனைத்து உயிரினங்களையும் நேசித்தல்  போன்ற முகமது நபியின் போதனைகள் இன்றைய காலகட்டத்திற்கு  மிகவும் ஏற்றதாக அமைந்துள்ளது. இறை உணர்வுடன்  இயற்கை உணர்வும் சேர்ந்தால்  இந்த பூமி  ஒரு சொர்க்க பூமியாகும்.  காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்து கொண்டிருக்கும்  இந்த நேரத்தில் இயற்கை வளங்களை பாதுகாப்பதும்  பசுமை வளத்தை அதிகரிப்பதும்  நம் அனைவரின் கடமையாகும்  என்பன போன்ற பல செய்திகளை கூறினார்.    பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்களான  அலி, மொய்தீன் குட்டி, மொய்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொழுகைக்கு வந்த அனைத்து மக்களுக்கும் பள்ளிவாசல்  நிர்வாகத்தின் சார்பாக  பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad