கோத்தகிரி கிளை நூலகத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிளை நூலகத்தில் அய்யன் திருவள்ளுவர் வெள்ளிவிழாவை முன்னிட்டு மாவட்ட நூலத்தின் வழிகாட்டுதலின்படி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. கோத்தகிரி கிளைநூலக வாசகர் வட்ட தலைவர் திரு. கெளரி வரதராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கோத்தகிரி சிட்டிசன் பாரம் தலைவர் திரு. K.L. ராஜ்குமார் அவர்கள் தொகுத்து வழங்கினார். கோத்தகிரி சிட்டிசன் பாரம் பொதுச்செயலாளர் B.J. முருகன், N.K. சரவணன் உட்பட நூலகர் வாசகர்வட்டத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment