கோத்தகிரி அரசு பள்ளியில் தேசிய கணித தினம்
ஒவ்வொரு ஆண்டும் இந்திய கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த நாளான டிசம்பர் 22ஆம் நாள் தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சிறப்பு கருத்தரங்கு கோத்தகிரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் முனைவர் ராயர் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே. ஜே .ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூறிய கருத்துக்கள்.....
கணிதமேதை ராமானுஜம் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் கற்பித்தார் என்று கூறப்படுகிறது. 32 ஆண்டு காலமே வாழ்ந்த அவர் தன் வாழ்நாளில் 3900 கணித சமன்பாடுகளை கண்டறிந்துள்ளார். அவர் எழுதி வைத்துள்ள சில கணித சமன்பாடுகளை இன்றளவும் அதற்கான விடை தெரியாமல் கணிதப் பேராசிரியர்கள் தத்தளிக்கிறார்கள். கணிதம் என்பது ஏதோ பள்ளி மாணவர்களுக்கானது என பொதுமக்கள் நினைக்கிறார்கள். கணிதம் நமது மூளையின் செயல்பாடுகளை விரிவாக்குகிறது. முறையாக சிந்திக்கும் ஆற்றலை நமக்கு அளிக்கிறது. மனித மூளையில் பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. ஒவ்வொரு நியூரானும் ஆயிரம் நியூரான்களோடு இணைப்பில் உள்ளது. கணிதம் இந்த நியூரான்கள் இணைப்பை அதிகரிக்கிறது. மூளையின் சுருங்கி விரியும் தன்மையை அதிகரிக்கச் செய்வதால் நமது சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கும். மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிப்பதில் மனக்கணக்குகள் சிறப்பான இடத்தை பிடித்துள்ளன. ஒரு சதுர வடிவ நிலத்தைச் சுற்றி ஒரு பக்கத்திற்கு 10 தூண்கள் வீதம் எத்தனை தூண்கள் தேவைப்படும், ஒரு வீட்டில் அம்மா அப்பாவிற்கு ஏழு மகன்களும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சகோதரியும் இருந்தால் மொத்தம் எத்தனை பேர் போன்ற மனக்கணக்குகளை கூறி மாணவர்களின் மூளை செயல்பாடுகளை தூண்டும் வகையில் ஆசிரியர் ராஜு பயிற்சி அளித்தார். மேற்கூறிய இரண்டு கணக்குகளுக்கு விடை 36 மற்றும் 10 ஆகும். ஒரு கம்ப்யூட்டர் நிபுணரை விட மளிகை கடையில் மனக்கணக்காக கணக்குப் போடும் ஊழியருக்கு மூளையின் செயல்படும் திறன் அதிகம். ஆகவே நமது சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்வதற்கு மனக்கணக்குகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட வேண்டும் என்பன போன்ற பல செய்திகள் கூறப்பட்டது. முன்னதாக முதுகலை ஆசிரியர் சரவணகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார். ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறை குறிக்கும் குறும்படம் மாணவர்களுக்கு காட்டப்பட்டது. முன்னதாக காலநிலை மாற்றம் மீட்டெடுப்பு மற்றும் பசுமை நீலகிரி 2024 என்ற திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் நூறு மரக்கன்றுகள் நடப்பட்டன.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment