மின்சார சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு கூடலூர் கோட்ட மின்சார பகிர்மான கழகம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ட்ரன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் ஆற்றல் மன்றம் ஆகியன சார்பில் மின்சார சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிவாசகம் வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் குளோராபுளோரி தலைமை தாங்கினார்.
மின்சார வாரிய உதவி மின் பொறியாளர்கள் கார்த்திக் (உப்பட்டி), தமிழரசன் (அய்யன்கொல்லி), தர்வேஷ் (பந்தலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துகுமார் பேசும்போது
மின்சார சிக்கன வார விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கடைபிடிக்கபடுகிறது. இதன் நோக்கம் அனைத்து இடங்களிலும் மின்சார ஆற்றல்களை சேமிக்க வேண்டும் என்பதாகும். மின்னாற்றல் இல்லாவிட்டால் தற்போதைய அனைத்து வகையான செயல்பாடுகளும் முடங்கி போகும். நிலக்கரி, தண்ணீர், காற்று, அனு உள்ளிட்டவை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி குறைந்து உள்ளதன் காரணமாக வெளிநாடுகளில் நிலக்கரி வாங்கி மின்சார உற்பத்தி மேற்கொள்ள வேண்டி உள்ளதால் நிலக்கரி வாங்க அதிக செலவினம் செய்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலை உள்ளது.
காற்று, சூரிய ஒளி, கடல் அலை, பூமியின் வெப்பம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். சோலார் மின் உற்பத்தி மேற்கொள்ள மத்திய அரசு தற்போது மானியம் வழங்கி வருகிறது. வீடுகளுக்கு தேவையான மின்சாரத்துக்கு சோலார் சூரிய சக்தி மூலம் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மின்சாரத்தை அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக மின்சரம் பயன்ப பயன்படுத்துவதால் வீட்டிற்கும் நாட்டிற்கும் செலவினங்கள் அதிகரிக்கிறது. மீன் தொட்டிகளுக்கு போடப்படும் மோட்டார்கள், எல்லா நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் டிவி, அலங்கார விளக்குகள் போன்றவற்றால் மின்சாரம் விரயமாகிறது. இவற்றை தடுத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும். வீடுகளில் வெளிச்சமாக இருக்கும் வகையிலும் அல்லது நமது உயர்த்துக்கேற்ற அளவு பல்புகளை பயன்படுத்துவது, எல் இ டி பல்புகள் பயன்படுத்துவது தர குறியீடு கொண்ட மின்சார உபயோக பொருட்கள் பயன்படுத்துவது மூலம் மின்சாரத்தை சிக்கனம் செய்யலாம் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி, ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment