புல்லட் யானையைப் பிடிக்க கும்கிகள் வரவழைப்பு
பந்தலுார் அருகே சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக 'புல்லட்' என்று அழைக்கப்படும் ஆண் யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இரவு நேரங்களில் கிராமங்களுக்கு வரும் இந்த யானை குடியிருப்புகளை இடித்து, உணவு பொருட்களை ருசித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. 17ம் தேதி இரவு மட்டும் ஏழு வீடுகளை இடித்து, அரிசி மற்றும் உணவு பொருட்களை உட்கொண்டது. வீடு சேதமடைந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சேரங்கோடு பகுதியில், அரசு தோட்ட நிறுவன (டான்டீ) தோட்ட தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதிக்கு வந்த உதவி வனப்பாதுகாவலர் கருப்பையா தலைமையிலான வன குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்ட, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 'விரைவில் அரசின் உத்தரவு பெற்று, யானை பிடித்து செல்லப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டது. இதனால், போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, படைச்சேரி, சின்கோனா, யானைப்பள்ளம் பகுதிகளில், 8 வீடுகளை புல்லட் யானை இடித்துள்ளது. இதனை அறிந்த மக்கள், நேற்று காலை, எம்.எல்.ஏ., ஜெயசீலன் முன்னிலையில் மூன்று இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ' இதுவரை, 30 வீடுகளை இடித்த யானையை முதுமலைக்கு பிடித்து செல்ல வேண்டும்,' என, வலியுறுத்தனர். தொடர்ந்து, வனத்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். அப்பகுதிக்கு, 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டு, காட்டு யானையை விரட்டும் பணி துவக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, படைச்சேரி, சின்கோனா, யானைப்பள்ளம் பகுதிகளில், 8 வீடுகளை புல்லட் யானை இடித்துள்ளது. இதனை அறிந்த மக்கள், நேற்று காலை, எம்.எல்.ஏ., ஜெயசீலன் முன்னிலையில் மூன்று இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ' இதுவரை, 30 வீடுகளை இடித்த யானையை முதுமலைக்கு பிடித்து செல்ல வேண்டும்,' என, வலியுறுத்தனர். தொடர்ந்து, வனத்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். அப்பகுதிக்கு, 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டு, காட்டு யானையை விரட்டும் பணி துவக்கப்பட்டது.கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:பந்தலுார் பகுதியில் முகாமிட்டுள்ள யானையை விரட்ட, முன் களப்பணியாளர்கள்; அதிவிரைவு படையினர்; யானை விரட்டும் காவலர்கள்; வேட்டை தடுப்பு காவலர்கள், 75 பேர் இப்பகுதியில் முகாமிட்டு, 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், டிரோனில் கண்காணித்து விரட்டும் பணி நடந்து வருகிறது. யானைரை விரட்ட முதுமலையில் இருந்து, 2 கும்கிகள் வர வழைக்கப்பட்டுள்ளன. யானையை கால்நடை டாக்டர் கண்காணித்து வருகிறார். எனவே, இந்த யானையை விரட்ட இப்பகுதி பொது மக்கள் ஒத்துழைப்பு நல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment