தமிழ் ஆட்சி மொழிச்சட்ட வாரவிழா
நீலகிரி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக தமிழ் மொழிச் சட்ட வார விழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சி உதகை மைய நூலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் வசந்தகுமாரி அனைவரையும் வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவி அமுதவல்லி தலைமைத் தாங்கி, ஆட்சி மொழிக் குறித்து கருத்துரை வழங்கினார். நூலகர் ரவி முன்னிலை வகித்தார். சக்தி சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர்கள் நீலமலை ஜே.பி, மணிஅர்ஜுணன், அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மாணிஷா, சுதிர், நூலகர்கள் சிவாஜிநஞ்சன்,
கண்ணாகன், ஆகியோர் உரையாற்றினர். தமிழ் வளர்ச்சித் துறை முத்துசெல்வி நன்றி நவில, புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். நாட்டுபண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது..
நன்றி!
புலவர் இர.நாகராஜ் உதகை..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment