சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவிக்கப்பட்ட பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை
நீலகிரி மாவட்டம் கூடலூர் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரியாணி கடையில் வாங்கிய பிரியாணியில் புழு இருந்ததாகவும் எனவே அந்தக் கடையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தது இது சம்பந்தமாக பலதரப்பட்ட சமூக ஆர்வலர்கள் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டு இதன் உண்மை நிலையை வெளியிட வேண்டும் என்று கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.இதனால் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவராஜ் தலைமையில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டதில் அந்த கடை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் இருப்பதாகவும் பழைய பொருட்களோ காலாவதியான பொருட்களோ எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது.
தமிழ குரல் இணையதள ள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment