தமிழக குரல் செய்தி எதிரொலி - கன்னேரிமுக்கு சாலையில் அபாயகர மரம் அகற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு சாலையில் அபாயகரமாக மரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது முன்னெச்சரிக்கையாக அகற்ற வேண்டும் என தமிழக குரல் செய்தி வெளியிட்டதில் கோத்தகிரி வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறி மரத்தை அகற்றினர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தமிழக குரலுக்கும் துரித நடவடிக்கை எடுத்து சரி செய்து கொடுத்த நிர்வாகத்திற்க்கும் நன்றி தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment