புல்லட் யானையால் மன உளைச்சலுக்கு உள்ளான வன காவலர்கள்
நீலகிரி மாவட்டம் பந்தலுார் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புல்லட் யானையை வன குழுவினர், 24 மணி நேரமும் கண்காணித்து வரும் நிலையில், உறக்கம் இல்லாமல் மன உளைச்சலுடன் பணியாற்றும் சூழலில் உள்ளனர்.
பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து, பொதுமக்களை புல்லட் என்று அழைக்கப்படும் ஆண் யானை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிடித்து செல்ல வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏழு நாட்களாக, குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதியில் இருந்து யானை வெளியே வராமல், வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.இதில், மொத்தமாக, 75 வனப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பகல் இரவு என 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் உடல் சோர்வு ஏற்பட்டும் மன உளைச்சலுடன் வனப் பணியாளர்கள் பணியாற்றும் நிலை தொடர்கிறது.ஆனால் ஆய்வுக்கு வரும் வனத்துறை உயரதிகாரிகள், ஒரு சில நிமிடங்கள் மட்டும் இந்த யானையின் நடமாட்டத்தை பெயரளவுக்கு ஆய்வு செய்வதுடன், யானை புதர் பகுதியில் இருந்து வெளியேறாமல், பார்த்துக்கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
வனத்துறையினர் கண்காணிப்பை மீறி, புல்லட் யானை வெளியில் வந்தால் அதற்கு அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறையினரை பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சேரம்பாடி டான்டீயை சேர்ந்த கணபதி கூறுகையில், ''இப்பகுதியில் நாள்தோறும் பகல் மற்றும் இரவு நேரங்களில் யானைகள் நடமாடி வருகிறது.
ஆனால், குறிப்பிட்ட ஒரு யானை மட்டுமே பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதுடன், வீடுகளையும் இடிக்கிறது. இந்த யானையை மயக்க ஊசி செலுத்திபிடித்து செல்லாவிட்டால், பொதுமக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment