நீலகிரி - பேரகனி பெண் விவசாயி சாதனையை பாராட்டிய குடியரசுத் தலைவர்.
நீலகிரி மாவட்டத்திற்க்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் ராணுவ மைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் வந்தார். உதகை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி பேரகனி ஹட்டியை சேர்ந்த பெண் விவசாயி திருமதி. விமலா அவர்கள் வீட்டில் தயாரித்த தேயிலைதூள் மற்றும் இயற்கை விவசாய முறையில் விளைவித்த காய்கறிகளை காட்சிப்படுத்தி இந்திய குடியரசுத் தலைவரை ஆச்சரியப்பட வைத்ததுடன் பாராட்டுக்களையும் பெற்றார் தமிழக ஆளுனர் அவர்களும் உடனிருந்தார். முன்னுதாரணமாக திகழும் பேரகனி ஹட்டி பெண் விவசாயி திருமதி . விமலா அவர்களுக்கு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment