குந்தா பகுதி விவசாயிகள் இண்ட்கோவிற்கு தேயிலை வழங்குவதை நிறுத்த அறிவிப்பு.
நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் உள்ள எட்டு கூட்டுறவு தேயிலை உற்பத்தி தொழிற் சாலைகளுக்கு பச்சை தேயிலை விநியோகம் செய்யும் சிறு தேயிலை விவசாயிகள் கடந்த அக்டோபர் மாதம் தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த ரூபாய் 24.59/ விலையை வழங்க கோரி கடந்த இரண்டு மாதங்களாக போராடி வருகின்றனர்.மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து மாநில துறை அமைச்சர் தலைமையில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுத்த முடிவை இது நாள் வரை அறிவிக்கவில்லை.மாநில அரசின் மீதுள்ள அதீத நம்பிக்கையின் பேரில் நல்லதொரு முடிவை ஏதிர்பார்த்து அவர்களின் போராட்ட முடிவு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் வேறு வழி யின்றி ஏற்கனவே விவசாயிகள் அறிவித்திறுந்தவாறு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை
(23-12-2024) முதல் பச்சை தேயிலை விநியோகம் செய்வதில்லை என்ற தங்களது முடிவை மிகவும் வருத்தத்துடன் நீலகிரி சிறு குறு தேயிலை விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் திரு. J.B. சுப்ரமணியன் (JBS) அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment