கூடலூர் பிரியாணி கடையில் புழுவா?கடை நிர்வாகம் மறுப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் பிரியாணி கடையில் இரு தினங்களுக்கு முன்பு வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பிரியாணியில் புழுக்கள் இருந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த வேளையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் பிரியாணி கடை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் ,கடை நிர்வாகத்தினர் தாங்கள் அளித்த பிரியாணியில் புழுக்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உண்மை நிலவரம் என்ன என்பது புரியாத புதிராகவே இருப்பதாக சமூக பல்வேறு தரப்பட்ட ஆர்வலர்கள் சமூக தங்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment