தனியார் வாகனங்கள் காப்பு காட்டிற்குள் நுழைந்தால் நடவடிக்கை
கூடலுார், பைக்காரா, கிளன்மார்கன் பகுதி காப்பு காட்டுக்குள் தனியார் ஜீப்புகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, பைக்காரா ஏரியில் படகு சவாரி செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள சில தனியார் வாகன ஓட்டுனர்கள் கிளன்மார்கன், காப்பு காட்டுக்குள் சுற்றுலா பயணிகளை, அழைத்து செல்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின், தனியார் வாகனங்கள் வனப்பகுதிக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலர் மீண்டும் தனியார் வாகனங்களில் காப்பு காட்டுக்குள் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பைக்காரா வனச்சரகர் சரவணன் கூறுகையில், '' இதுபோன்ற புகார் தொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன், கூடலுார் டி.எஸ்.பி., தலைமையில் ஓட்டுனர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இதனை கண்காணிப்பதற்காக, 10வது மைல் பகுதியில் சோதனை சாவடி கட்டும் பணியும் நடந்து வருகிறது. தடைசெய்யப்பட்ட பகுதிக்கு நுழைந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment