ஊட்டியில் உள்ள ஏலிம் ஐ.சி.ஆர்.எம். சேரிடபிள் டிரஸ்டின் சார்பில் தொடர்ந்து நிறைய சமூக பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள நிர்மலா மருத்துவமனைக்கு ரூ.27000/- மதிப்புள்ள பெட்ஷீட், தலையனை, கம்பளிகள் ஆகியவைகள் வழங்கப்பட்டது.
ஏலம் ஐ.சி.ஆர்.எம் சேரிடபுள் டிரஸ்டின் நிர்வாக இயக்குநர் Pastor. Rajan Samuel அவர்கள் மருத்துவமனையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து, தொடர்ந்து சிறப்பான சேவை புரிய அனைவரையும் உற்சாகப்படுத்தி பொருள் உதவிகளை வழங்கினார். டிரஸ்டின் நிர்வாக உறுப்பினர்களும், ஐ.சி.ஆர்.எம். தேவாலயத்தின் முதல்நிலை தலைவர்களும், பொதுமக்களும் இந்நிகழ்வில் கலத்துக் கொண்டு சிறப்பித்தனர். நிர்மலா மருத்துவமனையின் பொறுப்பு தலைமை Sister அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். முடிவில் அனைவருக்கும் சிற்றுண்டியும் தேனீரும் வழங்கப்பட்டு இந்நிகழ்ச்சி சிறப்புற நிறைவுப் பெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment