பாழடைந்த சாலையால் நோயாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மேல்கூடலூர் பகுதியில் அமைந்துள்ளது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இங்கு செல்லும் சாலையானது மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள்,வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்இதனை சரி செய்ய பலமுறை பலதரப்பட்ட பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை சம்பந்தப்பட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என மன குமுறல்களை வைத்து வருகின்றனர் பலதரப்பட்ட மக்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment