100 நாள் காசநோய் கண்டறியும் முகாம் துவக்கம்
தேசிய காசநோய் தடுப்பு தடுப்பு திட்டம் மற்றும் மாநில காசநோய் தடுப்பு திட்டம் மூலம் கூடலூர் நகர சுகாதார மையத்தில் 100 நாள் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் யோகராஜ் முன்னிலை வகித்தார். நகர சுகாதர நிலைய மருத்துவ அலுவலர் அன்பு காசநோய் குறித்து விளக்கம் அளித்தார்.மேலும் செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான காச நோய் கண்டறிதல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா முகாமை துவக்கி வைத்தார். நகராட்சி அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் மற்றும் நோய்த்தொற்று குறித்து பரிசோதனை மேற்கொண்டனர். முன்னதாக காசநோய் தடுப்புக்கான உறுதி மொழி எடுக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment