நீலகிரி மாவட்டம், INDCO SERVE கூட்டுறவு தேயிலை விவசாயிகள் மாவட்ட திமுக செயலாளருடன் சந்திப்பு.
நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது.
நீலகிரி கூட்டுறவு தேயிலை விவசாயிகள் தங்களுக்கான உரிய விலை தற்போது குறைந்துள்ளதாகவும், இது குறித்து மாண்புமிகு சிறு-குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களிடம் தெரிவித்து, உரிய விலை கிடைக்க உதவிட வேண்டும் எனக்கூறி, மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை சந்தித்து தேயிலைக்கான விலை குறைந்துள்ளதாகவும், இவர்களுக்கு உதவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட திமுக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு, கோவையில் நீலகிரி கூட்டுறவு விவசாயிகள் உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன் அவர்கள் தலைமையில் சந்திக்க ஏற்பாடுகள் செய்தும், இவர்களது கோரிக்கையை பரிசீலித்து உதவிட வேண்டுகோள் விடுத்தார்.
சந்திப்பின்போது, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, சதக்கத்துல்லா, மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, ராமச்சந்திரன், எல்கில் ரவி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் மற்றும் கூட்டுறவு தேயிலை விவசாய சங்கத்தினர் மஞ்சூர்:- அர்ஜுனன், ராதாகிருஷ்ணன், குந்தா:- ஜெயக்குமார், அர்ஜுனன், பீமன், மேல்குந்தா:- ராமலிங்கம், மணி, பிக்கட்டி:- சந்திரன், மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, இத்தலார்:- லட்சுமணன், விஸ்வநாதன், நஞ்சநாடு:- சந்திரன், சிவராமன், மகாலிங்கா:- வேணுகோபால் ஆகியோர் இருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment