துயர சம்பவங்கள் ஏற்படும் முன் நெடுஞ்சாலை துறையினரும் வனத்துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 November 2024

துயர சம்பவங்கள் ஏற்படும் முன் நெடுஞ்சாலை துறையினரும் வனத்துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை


 நீலகிரி மாவட்டம் உதகை      கேத்தி      பேரூராட்சிக்கு சேர்ந்த வெல்பக் எஸ்டேட் அருகிலுள்ள அண்ணாநகர் சாலை மிகவும் பழுதடைந்து குழியும் குண்டுமாக உள்ளது நாள்தோறும் இவ்வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன இச்சாலையில் நாள்தோறும் வாகனங்கள் விபத்து ஏற்படும் வண்ணம் உள்ளது பள்ளி  வாகனங்களும் அரசு பேருந்தும் இவ்வழியாக செல்லும் போது மக்கள் மிகவும் சிரமம் படுகின்றனர் ஆகவே இச்சாலையினை போக்குவரத்துக்கு ஏற்றவாறு அமைத்துத் தருமாறு பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறையினரை கேட்டுக்கொள்கின்றனர் இச்சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாமலும் மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர் இச்சாலையில் இரவு நேரங்களில் வனவிலங்குகளான சிறுத்தை கரடி காட்டுமாடு காட்டுப்பன்றி முதலான வனவிலங்குகள் ஏராளமாக உலா வருகின்றன இங்கு துயர சம்பவங்கள் ஏற்படும் முன் நெடுஞ்சாலை துறையினரும் வனத்துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் 



நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad