மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை தாங்கியும், மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் *கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்திற்கு* சிறந்த இரத்ததான அமைப்புக்கான விருது வழங்கப்பட்டது *கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கூடலூர் நுகர்வோர் மைய செயலாளர் சிவசுப்பிரமணியம்* மற்றும் நிர்வாகி பிரேம்குமார் ஆகியோர் சிறந்த தன்னார்வ இரத்த தான அமைப்புக்கான விருதினை பெற்றுக் கொண்டனர்
கூடலூர் வட்டாரத்தில் முதன்முதலில் இரத்த தான சேவை துவங்கிய முதல் அமைப்பு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் என்பதும் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் நடத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் புதிய இரத்த கொடையளர்களை உருவாக்கியும் வருகிறது என்பதும் குறிப்பிட தக்கது
*கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்*
*1 முறை மாநில அளவிலான விருதும் மாவட்ட அளவில்*
*20 வது முறையாகவும் தொடர்ந்து சிறந்த ரத்ததான அமைப்புக்கான விருதினை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிட தக்கது*
No comments:
Post a Comment